ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று ...இதமாகக் கையைப் பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது. கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே? ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா? இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்..??????

இதுக்கு அப்புறம் விழுந்த அடி, கேக்கவா வேணும்...!



உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே

செம்ம பார்ட்டி........

Saturday, May 10, 2014
Posted by Unknown

ஒரு வீட்ல ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணீருந்தாங்க.,

எதிர்பாராத விதமா 500பேருக்கு மேல அந்தபார்ட்டிக்கு

வந்துட்டாங்க.,அங்க200 பேருக்குதான் சாப்பாடு இருக்கு.,

என்ன பண்ணுரதுனு தெரியல,அந்த வீட்ல இருந்த

பெரியவர் இந்த ப்ரச்சனைய நான் தீர்த்து வைக்கிறேன்னு...

சொல்லி.,எல்லாருக்கும் நடுவுல நின்னு பொண்ணு

வீட்டுக்காரங்க எல்லாரும் எந்திரிங்க னு சொன்னார்.,

200பேர் எந்திரிச்சாங்க,திரும்ப அந்த பெரியவர் இப்போ

மாப்பிள வீட்டுக்காரங்க எல்லாம் எந்திரிங்கனு சொன்னார்.,

அப்பவும் 200பேர் எந்திரிச்சாங்க,இப்போ நீங்க எல்லாரும்

இங்க இருந்து போகலாம்.,எந்திரிக்காதவங்க மட்டும்

சாப்பிட போகலாம்.,ஏன்னா இது கல்யாண பார்ட்டி இல்ல.,

என் பேத்தியோட பர்த்டே பார்ட்டி னு சொன்னார்....





உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே
Image and video hosting by TinyPic
அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது….

பேருந்துக்குள் கொணர்ந்து
மாலைமுரசு விற்பார்கள்.

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும்
அமர இடம் கிடைக்கும்.

மிதிவண்டி வைத்திருந்தோம்.
நான் பஞ்சர் ஒட்டப் பழகியிருந்தேன்.

எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தார்.
கலைஞரின் அறிக்கைகளைத் தேடிப் படித்தார்கள்.

எல்லா வீடுகளிலும்
முதல் மரியாதை பாடல் ஒலித்தது.

வானொலி நாடகங்களை
ரசித்துக் கேட்டோம்.

சாவி இதயம் பேசுகிறது
பத்திரிகைகள் வந்தன.

எல்லாருமே
அரசுப் பள்ளிகளில் படித்தோம்.

சாலையில்
எப்போதாவது ஒரு வண்டி போகும்.

மழை
நின்று நிதானமாகப் பொழியும்.

சாராயக் கடைகள் இருந்தன
இன்றைய கூட்டம் அக்கடைகளில் இருந்ததேயில்லை.

தமிழாசிரியர்கள்
தந்நிகரற்று விளங்கினார்கள்.

வேலைக்குப் போகாதவன்
எந்தக் குடும்பத்திற்கும் பாரமாயில்லை.

எளிதில் மணப்பெண் கிடைத்தாள்.

வெஸ்ட் இண்டீசை வெல்லவே முடியாது.

சந்தைக்குப் போக பத்து ரூபாய் போதும்.
முடிவெட்ட இரண்டு ரூபாய்தான்.

யுவதிகள் பாவாடை தாவணி உடுத்தினர்.
சிலிண்டர் மூடுதுணிபோல்
யாரும் நைட்டி அணியவில்லை.

ராமராஜனைக்கூட விரும்பி ரசித்தோம்.

சுவாசிக்கக் காற்று இருந்தது
குடி தண்ணீரை விலைக்கு வாங்கவில்லை.

தெருவில் சிறுமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள்.
நாங்கள் அவர்களை டபாய்த்துக் கொண்டே
நுங்கு வண்டி ஓட்டுவோம்…!

மயில் இறகுகள் குட்டி போட்டன புத்தகத்தில்.
ஐந்து ரூபாய் தொலைத்ததற்கு அடி வாங்கினேன்.

மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே ஆங்கிலம்.
ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்.

கடந்து தொலைந்துப் போனவை-

நாட்கள் மட்டுமல்ல…. நம் சுகங்களும், நம்பிக்கைகளும்தான்!

ஆம்…
அந்தக் காலம் நன்றாக இருந்தது !

Image and video hosting by TinyPic


Image and video hosting by TinyPic 

Image and video hosting by TinyPic



Image and video hosting by TinyPic




உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே

ஐயோ ராமா........!

Thursday, January 2, 2014
Posted by Unknown


ஒரு இண்டர்வியூ-வின் போது.....

மேலாளர் : நான் சொல்றதுக்கு எதிர்வார்த்தைய சொல்லுங்க...!

பையன்: ஓகே சார்... சொல்லுங்க. நான் ட்ரை பண்றேன்...!

மேலாளர்: நல்லது,

பையன்: கெட்டது,

மேலாளர்: வாங்க சார்,

பையன்: போங்க சார்,

மேலாளர்: அழகு,

பையன்: ஆபத்து,

மேலாளர்: நீங்க தப்பா சொல்றிங்க,

பையன்: நான் சரியா சொல்றேன்,

மேலாளர்: பேச்ச நிறுத்து,

பையன்: தொடர்ந்து பேசு,

மேலாளர்: இப்போ வாய மூடுரியா இல்லையா...?

பையன்: இப்போ பேசுறியா இல்லையா...?

மேலாளர்: நிறுத்துடா எல்லாத்தையும்,

பையன்: தொடங்குடா எல்லாத்தையும்,

மேலாளர்: போடா வெளிய,

பையன்: வாடா உள்ள,

மேலாளர்: ஐயோ கடவுளே..

பையன்: ஆஹா பிசாசே...

மேலாளர் : யு ஆர் ரிஜக்டட்...!

பையன் : ஐ ஆம் செலக்டட்...!
 

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே

தொழிலதிபர் ஒருவர் ரோபோ ஒன்றை வீட்டில் வாங்கி வைத்திருந்தார். அந்த ரோபோ யாரவது பொய் சொன்னால் கன்னத்தில் பளார் என்று அறைந்து விடும்..

ஒரு முறை தொழிலதிபர் மகன் இரவு நேரத்தில் வீட்டுக்கு லேட்டாக வந்தான்..

தொழிலதிபர்: ஏன்டா லேட்டு ?? எங்கட போயிருந்த
மகன்: அப்பா நண்பர்களோட சேர்ந்து பரீட்சைக்கு படிக்க போயிருந்தேன்

ரோபோ மகனின் கன்னத்தில் நச்சுன்னு ஒரு அறை விட்டது ...

கோவம் அடைத்த தொழிலதிபர் மகனிடம்: ஒழுங்கா உண்மையை சொல்லிடு இல்ல ரோபோ கிட்ட மறுபடியும் அடி வாங்குவ

மகன்: மன்னிச்சிடுங்க அப்பா .. நண்பர்களோட சினிமா பார்க்க போயிருந்தேன்

தொழிலதிபர்: டேய் நீ எல்லாம் உருப்படவே மாட்ட.. நானெல்லாம் உன் வயசுல எப்படி படிப்பேன் தெரியுமா ????

ரோபோ தொழிலதிபரின் கன்னத்தில் ஒரு அறை விட்டது ...

இதை பார்த்து லேசான புன்னகையுடன் வந்த தொழிலதிபரின் மனைவி: என்ன இருந்தாலும் உங்களுக்கு பிறந்த பையன் உங்களை மாதிரி தானே இருப்பான்..

இப்போது ரோபோ தொழிலதிபரின் மனைவியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டது.

இந்தியன் பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.

”நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் பீர் குடிப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும். சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார்.

யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.

”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.

அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, ”ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார்.

”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வேறொரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்” என்றார் அவர்.




உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே
Welcome to My Blog

Subscribe via email

Recommended Post Slide Out For Blogger
Powered by Blogger.

Business

Flickr Widget

Comments

Random Posts

Facebook

Popular Posts

- Copyright © Greencity -RK computers- Powered by Blogger - edit by Rajkumar -